புதுச்சேரியில் இருந்து கார் மூலம் மதுபானம் கடத்தி வந்த 2 பேர் கைது 2 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில் மற்றும் கார் பறிமுதல்

Published: 01/05/2024 11:17 AM Updated: 01/05/2024 11:17 AM
Ads
news-banner

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பதை தடுப்பதற்கு மாவட்ட காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் விழுப்புரம் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் மீனா அவர்களுக்கு புதுச்சேரியில் இருந்து கார் மூலம் மதுபானம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஆய்வாளர் மீனா தலைமையில் மதுவிலக்கு போலீசார் எல் ஆர் பாளையம் ரயில்வே கேட்டு அருகே தீவிர வாகனம் சோதனையில்  ஈடுபட்டனர். அப்பொழுது புதுச்சேரி மாநிலத்தில் இருந்து வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த பொழுது அந்த 25 பெட்டிலில் 357 உயர்ரக மதுபான பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் கார் ஓட்டுநர் மற்றும் உடன் இருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்ட பொழுது திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பதும் மற்றொருவர் கோயம்புத்தூர் மாவட்டம் சரவனாதி பகுதியை சேர்ந்த பூபதி என்பதும் தெரிய வந்தது. உடனடியாக போலீஸ் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த மதுபாட்டில்கள் மற்றும் மது பாட்டில் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் உள்ளிட்ட பறிமுதல் செய்தனர் இதன் மொத்த மதிப்பு சுமார் 5 லட்சம் ஆகும்.