நாகப்பட்டினம்-இலங்கை, காங்கேசன் கப்பல் போக்குவரத்து மே 19 அன்று தொடங்கும்

Published: 17/05/2024 12:54 PM Updated: 17/05/2024 12:54 PM
Ads
news-banner

மே 17 ஆந்தேதி நேற்று காலை தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நாகப்பட்டினம் - இலங்கை இடையேயான  பயணியர் கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் மே 19 ஆந்தேதிக்கு  தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

அந்தமானில் இருந்து, நாகைக்கு வரவேண்டிய சிவகங்கை எனும் பயணியர் கப்பல் மழை,  கடல் சீற்றம் போன்ற காரணங்களால் வர தாமதமானதாலும்,  கப்பல் போக்குவரத்து சேவை தள்ளிவைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணச்சீட்டு முன்பதிவு செய்திருந்த பயணிகள் வரும் 19ஆம் தேதி தங்கள் பயணத்தை மாற்றிக் கொள்ளலாம் என சென்றமுறை போலவே இந்த முறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது  முறையாக கப்பல் பயணத் தேதி தள்ளிப்போனது குறித்து யாழ்ப்பானம் செல்லவிருந்த சுற்றுலா பயணிகள், மற்றும் அது சார்ந்த வியாபாரிகள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர். 19 ஆந்தேதியாவது அறிவித்தபடி கப்பல் போக்குவரத்து தொடங்குமா என்ற கேள்விக்குறி அனைவரிடமும் எழுந்துள்ளது.