தமிழகத் எத்தனை முறை மோடி வந்தாலும் பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது

Published: 10/04/2024 10:10 AM Updated: 10/04/2024 10:10 AM
Ads
news-banner

விழுப்புரம் திருக்கோவிலூர் சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில்  விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சிதம்பரம் ஆகிய தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்திற்கு வருகை தந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தேசிய பொதுச் செயலாளர் ராஜா முன்னதாக செய்தியாளரை சந்தித்து நேற்று பேட்டி அளித்தார். அப்பொழுது ராஜா கூறுகையில்,

 

விழுப்புரத்தில் நான் இருக்கின்ற நேரத்தில் சென்னையில் பிரதமர் மோடி வருகை தந்துள்ளார். மோடி பலமுறை தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ளார். அவர் எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை மக்கள் உணர்த்தி உள்ளார்கள்.  பாஜக தமிழ்நாட்டில் காலூன்றுவது இயலாது என்று நாம் எல்லோரும் அறிந்த ஒன்று பெரியார் கொள்கை, அம்பேத்கர் கொள்கைகள் செழித்து வளர்ந்து வேரூன்றிய மண் இந்த மண். இந்த மண்ணில் மதவெறி கொள்கைகளுக்கு இடமில்லை என்பதில் தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். பாஜக ஆட்சி பொறுப்பேற்று ஒன்பது ஆண்டு காலங்களில் பல்வேறு மதவெறிகளை தூண்டி வருகின்றன இந்த ஆட்சி தொடருமானால் எல்லாருக்கும் மிக மோசமான ஆட்சியாக இருக்கும். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு ஒரு படுதோல்வி உள்ளது. மோடிக்கு ஏற்பட்ட விரக்தி நாள் இன்று நிதானம் இழந்து பேசுகிறார் மோடி என்றும் மோடி தற்பொழுது பேசி வருகிறார் என்றார்.